Skip to main content

Posts

Showing posts from September, 2026

தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்

  தேனி, செப்.28- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 28.9.2026 அன்று மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை மாவட்ட  கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல். தாய் மற்றும் சேய் நலம் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 2026 முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் விதமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை...

தேனியில், தமிழ் இலக்கியக் கழகம் தொடக்கம்

தேனி, செப்.26- தேனியில் தமிழ் இலக்கியக் கழகம் தொடக்கம் நிகழ்ச்சி தேனி காமராஜர் பூங்கா அருகே உள்ள திண்ணை பயிற்சி மையத்தில் 26.9.2026 அன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வி. பழனிச்சாமி தலைமை தாங்கினார்.  புலவர் சேவியர் பீட்டர் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் திண்ணை பயிற்சி மைய நிர்வாகி செந்தில், எழுத்தாளர் சுப்பிரமணி, ஆண்டிபட்டி ஞானபாரதி, சின்னமனூர் வட்டார தொழில் முனைவோர் சங்க உதயகுமார், தொழிலதிபர்கள் ஜாய், நிக்சன், அய்யன் குமார், தமிழாசிரியர் போடி பழனிச்சாமி உள்பட தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் போது தமிழ் மொழி, தமிழ் சமுதாயம் சேவை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த தமிழ் இலக்கியக் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  ................................ K.நாகராஜ், தலைமை நிருபர்  

தேனி யூனியன், நாகலாபுரம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டும் இடங்களில் சாலையோர மரக்கன்றுகள் அமைக்கும் பணி

தேனி, செப்.25- தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் நாகலாபுரம் மற்றும் கோபாலபுரம் கிராமங்களில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடங்களில் தேனி மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதன் அவர்களின் உத்திரவின்படி குப்பைகள் அகற்றப்பட்டு , சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக மரக்கன்றுகள் அமைக்கும் பணி தேனி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்/தணிக்கை) வெங்கடேஷ்வரன் தலைமையில் தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை  துவக்கி வைத்தனர்.   அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஊராட்சி செயலர் சுருளி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். .............................. K.நாகராஜ், தலைமை நிருபர் 

தேனியில், ஆக்சன் டெசா சார்பில் தச்சு தொழிலாளர்கள் தினம்

தேனி, செப்.25 - தேனியில் ஆக்சன் டெசா சார்பில் தச்சு தொழிலாளர்கள் தினம் ஏபிஎம் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆக்சன் டெசா நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜெயன், தமிழ்நாடு மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி மாவட்ட விற்பனையாளர் தேனி பிளைவுட் உரிமையாளர்கள் ராஜசேகர், விஜய்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதனைத்தொடர்ந்து ஆக்சன் டெசாவின் மேலாண்மை இயக்குனர் விஜய் அகர்வால் காணொலி காட்சி மூலம் சிறப்பாக கலைநயத்துடன் வடிவமைக்கும் தச்சு தொழிலாளர்களை பாராட்டி உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் ஆக்சன் டெசா நிறுவன அலுவலர்கள் கோவை கோகுல்நாத், திருச்சி ரியாஸ்தீன், தேனி தமிழரசன், சேலம் பூபதி, திருநெல்வேலி முகமதுயாசின், புளோரிங் டிவிசன் பிரதீப் உள்பட சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட தச்சு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆக்சன் டெசா நவீன சிறந்த தயாரிப்பான எம்.டி.எப், மற்றும் எச்.டி.எச்.ஆர் பாய்லோ போர்டுகள் காட்சிபடுத்தபட்டிருந்தது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தச்சு தொழிலாளர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்...

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மற்றும் பென்னிகுயிக் அரிமா சங்கம் சார்பில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள கம்பம் எம்.எல்.ஏ.-விடம் கோரிக்கை மனு

தேனி, செப்.23- தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் பென்னிகுயிக் அரிமா சங்கம் சார்பில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களை கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு எம்.எல்.ஏ.-விடம் கோரிக்கை வைத்தனர். இதேபோன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் அவர்களை சந்தித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன், சுகாதாரம் மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்புகளில் தமிழ்நாடு தொண்டு கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் நேசம் முருகன் மற்றும் அதிதி பவுண்டேஷன் நிறுவன தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட...

மேகமலை புலிகள் காப்பகம் (மேகமலை கோட்டம்) நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான மாதிரி சூரிய ஆற்றல் பழங்குடியினர் கிராம திட்ட தொடக்க விழா: தேனி கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

  தேனி, செப்.23- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 22.9.2026 அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (மேகமலை கோட்டம்) மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) இணைந்து நடத்திய நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான மாதிரி சூரிய ஆற்றல் பழங்குடியினர் கிராம திட்ட தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. நொச்சியோடை என்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உட்பட்ட மேகமலை வனப் பகுதியின் மையப் பகுதியில் (Core Area) அமைந்துள்ள சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ள  தொலைதூர பழங்குடியினர் குடியிருப்பாகும். இக்குடியிருப்பில் 18 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் வசித்து வருகின்றனர். பல வருடங்களாக மின்சார வசதி இன்றி வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள், வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பியிருந்ததுடன், கைப்பேசிகளை மின்னேற்றம் செய்யவும், அடிப்படை தகவல் தொடர்பு வசதிகளைப் பெறவும் வனப்பகுதிக்கு வெளியே நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.  இப்பழங்குடியினரின் உரிமைகள் வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு...

தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி: முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதன் துவக்கி வைத்தார்.

தேனி, செப்.23- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை 90 ஆண்டுகளுக்கு மேலாக கோ-ஆப்டெக்ஸ்" என்ற வணிக முத்திரையுடன் தற்போது 146 விற்பனை நிலையங்கள் மூலம் வணிகப்படுத்தும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.  பட்டு மற்றும் பருத்தி இரகங்களின் பாரம்பரிய மற்றும் நவீன சமகால வடிவமைப்புகளை கொண்டு சிறந்த கைத்தறி இரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை காலத்திற்கான புதிய வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.  மேலும், இளைய தலைமுறை வடிவமைப்புகளில் அவர்களது தேவைகளை வாடிக்கையாளர்களுக்கேற்ற நிறைவேற்றும் வண்ணம் பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட இரகங்கள் விற்பன...

சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து: தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

தேனி, செப்.22- தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சின்னமனூரில் சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, தேனி நகர சர்வேயர் கணேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகர சார் ஆய்வாளராக பணிபுரியும்  ஜெகன்குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் அளவை பணிக்கு சென்றுள்ளார். அப்போது  அவர் குண்டர்களால் தாக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை  பெற்று வருகின்றார். இந்த ச...

தேனியில் உலக அமைதி தின விழா: சிறந்த சமூக சேவகர் விருதினை போடி குறிஞ்சிமணிக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் தலைவர் நீதிபதி இரஜினி வழங்கினர்

தேனி, செப்.22- தேனி மாவட்ட உலக அமைதிக்குழு மற்றும் மனிதநேய காப்பகம் சார்பில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு, ஒற்றுமையை வலியுறுத்தியும் உலகப் போர்களை நிறுத்தக்கோரியும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் உலக அமைதிக்கான விருது வழங்கும் விழா 21.9.2026 அன்று தேனியில் நடைபெற்றது. தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற உலக அமைதி தின விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட போலீஸ் ஏ.டி.எஸ்.பி., மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த ஊர்வலத்தில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் சிதம்பரம் உள்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வுப் பேனர்களை ஏந்தி சென்றனர். அதனைத்தொடர்ந்து தேனி 'வெஸ்டர்ன் காட்ஸ்' ஹோட்டலில் உலக அமைதிக்கான விருது வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு ஏ.எம்.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் (AMR Group of Companies) AMRR. சந்திரகுமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான A.K.K. இரஜினி,...

கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா உடன் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல்

தேனி, செப்.19- தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) சார்பில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த மாநில நிர்வாகிகளுடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்துரையாடினார். அப்போது தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள், அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் உள்ள சவால்கள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். கூட்டமைப்பு சார்பில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நலன், வளர்ச்சி மற்றும் உரிமைப் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கை மனுக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கப்பட்டன. மனுக்களில் இடம்பெற்ற கோரிக்கைகள் மீது உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுடன் பேசி தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எம்.எல்.ஏ., உறுதியளித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் சேவையை பாராட்டி, சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு சட்...

பூதிப்புரம் பேரூராட்சியில், தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் கிளார்க்: மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தேனி, செப்.19- தேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெரு மின்விளக்கு, போன்ற அடிப்படை பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  இதற்காக பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரி போன்ற வரிகள் மூலம் வருவாயை வசூல் செய்து பேரூராட்சி பகுதியில் அடிப்படை பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் உள்ள கிளார்க், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர் பேச்சை கேட்பது இல்லை. பேரூராட்சி மன்ற நிர்வாகத்தின் பேச்சையும் கேட்பது போல் தெரிவதில்லை. நானே ராஜா.. நானே மந்திரி... என்று கூறிக்கொண்டு தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுத்து மக்கள் வரிப்பணத்தில் விளையாடி வீணடித்து வருகிறார். இதில் இந்த கிளார்க் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவில்லை என்றால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலவு எதில் குறைவோ அதை தானே அவர் முடிவு செய்து மக்கள் பணத்தை சேமிக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யமாட்டார். அதுபோல மக்கள் வைக்...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணி தமிழக அரசுக்கு கோரிக்கை

தேனி, செப்.17- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழல் பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தேங்கி நிற்கும் குடிநீர், சுகாதாரமற்ற சூழல், முறையாக அகற்றப்படாத குப்பைகள் போன்றவற்றால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செல...

தேனியில், இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது

தேனி, செப்.15- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 11-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே வைத்து பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 15.9.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊர்வலத்தில் ஆன்மிக அருளா...