Skip to main content

Posts

Showing posts with the label கல்லூரி

தேனி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகன சிறப்பு மையம் திறப்பு விழா

தேனி, ஜூலை.18- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்த தின கல்வித்திருவிழாவை முன்னிட்டு மின்சார வாகன சிறப்பு மையம் (Center of Excellence in Electric Vehicle) திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தாமராஜன் அவர்கள் தலைமை தாங்கி மின்சார வாகன சிறப்பு மையத்தினை திறந்து வைத்து மாணவர்களிடையே எதிர்கால போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள இத்தகைய சிறப்பு மையங்கள் பெரிதும் உதவுமென்று சிறப்புரையாற்றினார். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம், இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த மையத்தின் மூலம் மின்சார வாகன வடிவமைப்பு. பேட்டரி தொழில்நுட்பம். வாகன பராமரிப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி. தொழில்துறை பயிற்சி உள்ளிட்ட ப...

தேனியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி

தேனி, ஜன.25- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. . இந்த போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன். உபதலைவர் ஜீவகன். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் சோமசுந்தரம்,  இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவில் படைப்பில் 68 அணிகளும் ஹார்டுவேர் பிரிவு படைப்புகளில் 55 அணிகளும் சேர்ந்து 123 அணிகளாக 730 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டியில் மாணவ, மாணவிகளின் பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, கணினிபொறி மற்றும் அறிவியல் துறையின் ...