Skip to main content

Posts

Showing posts with the label ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.  தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24.11.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட பொருளாளர் வீரா ராமச்சந்திரா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை அகற்ற வேண்டும்.  தேனியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  தேனி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விபச்சார குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்.  தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோர...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் போராட்டம்

தேனி, நவ.19- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 18.11.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 19.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட பொருளாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற வேண்டும்.  புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும்.  காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர, சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்...

தேனியில், ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  தேனி, அக்.30-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 29.10.2025 அன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுந்தரபாண்டி முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுருளி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ரதவேல், பாண்டி, முத்துக்குமார், கணபதி உள்பட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தினை ரூ.10 ஆயிரமாக  உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும்.  ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இண...