தேனி, நவ.21- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஹோமியோபதி துறை சார்பில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது. முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தலைமை தாங்கினார். தேனி அமர்வு நீதிபதி அனுராதா வரவேற்றார். முகாமின் போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அன்னகாமு, ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர். முகாமில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் உள்பட கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர்
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,