தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்
தேனி, மே.9- தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் 9.5.2026 அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா) உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Doori முதலுதவி பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form), கண்காணிப்பு கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும் வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்...