தேனியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.
தேனி, டிச.3-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 212.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் படிவங்களை திரும்ப பெற்று, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்பொழுது, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் 11:12.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றம் செய்வதன் மூலமே வாக்காளர்களின் பெயர் 2026 வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். எனவே, திருநங்கை வாக்காளர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் பூர்த்தி செய்த தங்களது வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
இந்த முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி. மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்


Comments