வீரபாண்டி திருவிழாவில் இருந்து வீடு திரும்பிய குடும்பத்தை வழிமறித்து தங்க தாலியை பறிக்க முயற்சி : மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்
தேனி, மே.14- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, நகர செயலாளர் அழகு பாண்டி ஆகியோர் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஜெ. மகேஷ் அவர்களிடம் நேரில் புகார் ஒன்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் ரெங்கராஜ் ஆகிய நானும், எனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது போடி விலக்கு ரவுண்டானாவை தாண்டி ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது, ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து திடீரென இவர்களின் வண்டியை வழிமறித்து கீழே தள்ளி விட்டனர். அதில் வண்டியில் மூன்றாவதாக இருந்த மர்ம நபர், தனது கையில் வைத்திருந்த குறடினால் ரெங்கராஜன் அவர்களின் மனைவி நாகராணி அவர்களின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளார். அந்த குறடு கழுத்தில் பட்டதால் கடு...