போடி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தரும் திமுக பூத் நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை: பூத் நிர்வாகிகளை திறம்பட செயல்படுத்தும் நகர, ஒன்றிய செயலாளர்களுக்கு 5 பவுனில் தங்கபதக்கம்; திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் அறிவிப்பு
தேனி, ஏப்.10- போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள் மற்றும் போடி நகரத்தில் உள்ள BLA., BLA-2, BDA நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 10.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன் உள்பட ஒன்றிய செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்த...