Skip to main content

Posts

Showing posts from August, 2026

மேகமலை புலிகள் சரணாலயத்திற்காக; மாவட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: பரம்பரை வனவாசிகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, செப்.1- தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் பரம்பரை வனவாசிகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தங்கமலை, ஒருங்கிணைப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது  தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்திற்காக வருசநாடு, மேகமலை, முருக்கோடை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த வெளியேற்ற நடவடிக்கை தொடர்பாக அனைத்தும் சரியாக நடக்கவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு நாங்கள் ஏற்கனவே கடிதம் மூலம் கொண்டு வந்திருந்தோம் என்பதையும். மேலும் FRA-வின் கீழ் ஒரு நபர் பரிசீலிக்க தகுதியற்றவர் என்ற கேள்வி உள்பட FRA-வின் அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் வரை எவரும் வெளியேற்றப்பட கூடாது என்று WP(C) 109/2008-ல் 28.2.2019 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலையும் நாங்கள் சமர்ப்பித்திருந்தோம் என்பதையும் தங்கள் கருத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.  ஆனால், மாவட்ட அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறுவதில் பிடிவாதமாக உள்ளனர். மேலும் அந்த...

தேனி அரசு ஐ.டி.ஐ அருகே செல்லக்கூடிய திட்டச்சாலையை திறக்க கோரி நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் மாவட்ட கலெக்டரிடம் மனு

தேனி, ஆக.31- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது  கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திட்டச்சாலை வழியாக இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் தேனி அரசு ஐடிஐ அருகே பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் திட்டச்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.  அந்த திட்டச்சாலை மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற்ற போது நகராட்சி நிர்வாகத்தால் அரசினர் தொழிற்கல்வி நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிதி மூலம் திட்டச்சாலை துவக்கப்பட்டு இயங்கி வந்தது. 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு  முன்பிருந்தே திட்டச்சாலை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மண் மேடு உயர்த்தி பாதை இல்லாமல் உள்ளது. மதுரை சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் அரசினர் தொழிற்கல்வி நிறுவனத்திற்கு செல்வோரும் போக்குவரத்து இடையூறால் ...

கம்பம் எம்.எல்.ஏ., PLA.ஜெகநாத் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள்

தேனி, ஆக.22- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் PLA.ஜெகநாத் மிஸ்ராவுக்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து நன்றிகளை தெரிவித்தனர். கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினரின் ஐம்பது (50 ) ஆண்டுகால கோரிக்கையும், தமிழக மக்களின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு உரிமை சார்ந்த  மங்கலதேவி கண்ணகி கோவிலில், தமிழக அரசின் உரிமை பற்றியும், மங்கலதேவி கண்ணகி கோவில் புனரமைப்பு மற்றும் தமிழக வனப்பாதை சம்பந்தமாக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்றி தர தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் P.L.A.ஜெகநாத் மிஸ்ரா பேசினார். இதனைத்தொடர்ந்து மங்கலதேவி அறக்கட்டளையின் சார்பாக கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். ....................... நாகராஜ், தலைமை நிருபர் 

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்ற விட மாட்டோம்; தமிழக அரசு சார்பில் ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா பேட்டி

தேனி, ஆக.21- மேகமலை பகுதியில் இருந்து  மக்களை வெளியேற்ற விடமாட்டோம் கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா  பேட்டியில் தகவல்  தேனியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலையை சுற்றி உள்ள 98 கிராம மக்களை வெளியேற்ற கூடாது என்று சட்ட சபையில் பேசி உள்ளேன்.  இது குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு சில நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. மக்கள் தரப்பு நியாயங்கள், தேவையான ஆவணங்கள் இணைத்து மனு தாக்கல் செய்யப்படும்.கடந்த தி.மு.க., ஆட்சியில் மக்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைக்காததால் இந்த தீர்ப்பு வந்துள்ளது. மேகமலையில் பல தலைமுறைகளாக வசிப்பவர்களை வெளியேற்ற விட மாட்டோம்.  தமிழக முதல்வர் விஜய் மக்களுடன் உள்ளார். மக்கள் பதட்டப்பட வேண்டாம். தேவையற்ற வதந்தி பரப்ப கூடாது. இதனை அரசியல் ஆக்க வேண்டாம். சட்டசபை ...

தேனி அருகே பட்டா நிலங்களை அபகரித்து விட்டதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு

  தேனி, ஆக.20- தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி தாலுகா, ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் உள்ள ரேணுகா நகரில் இருக்கும் நிலங்கள் முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கவாசகன், முத்து பேச்சி, ராமசாமி உள்பட 15 பேர்களுக்கு சொந்தமான நிலங்களாகும். இந்த நிலங்களை ஒண்டிவீரன் காலனியை சேர்ந்த ராஜன் என்பவருடைய மகன் அலெக்ஸாண்டர் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் அது தன்னுடைய நிலம் என்று சொல்லி, நிலத்தை அபகரித்து வேலி அமைத்து மணல் திருட்டு வேலை செய்து வருகிறார்.  மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து கொண்டு பொக்லைன் மூலம் முள்வேலிகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து 15 பேர்களின் நிலங்களான 9 ஏக்கருக்கும் மேல் உள்ள நிலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து நில அபகரிப்பு செய்து வருகிறார். அந்த சர்வே எண்களுக்கு கட்டுப்பட்ட நிலம் பஞ்சமி நிலமோ அல்லது கள்ளர் ஜாதி நிலமோ அல்லாத பட்டா நிலங்களாகும்....

தேனி மாவட்டத்தில், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: அம்பாசமுத்திரம் ஊராட்சி கூட்டத்தில் கலெக்டர் இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்

தேனி, ஆக.15 இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 15.8.2026 அன்று நடைபெற்றது.  இதில் தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் பேசுகையில், ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கிராமப்புற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம். தொழிலாளர் வரவு, செலவு திட்டம்...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சர்வேயர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.12- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 11.8.2026 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பணி பாதுகாப்பு வழங்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் நில அளவை பணிக்கு சென்ற சர்வேயர் மகேஷ் அவர்களை எதிர் தரப்பினர் சர்வே செய்ய கூடாது என்று கூறி தாக்கி உள்ளதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். .............................. நாகராஜ் தலைமை நிருபர் 

வைகை அணை நீர்தேக்க பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து சென்ற பைப் லைன்கள் அகற்றம்

தேனி, ஆக.11- தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் இருந்து சட்ட விரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 10.8.2026 அன்று கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நீர்வளத்துறை அலுவலர்களின் கள ஆய்வின்போது, வைகை அணை நீர்த்தேக்கப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக தனி நபர்கள் மூலம் நீர் எடுத்துச் செல்லும் பைப் லைன்கள், ஏர் வெண்டுகள் கண்டறிப்பட்டதை தொடர்ந்து, அவற்றை உடனடியாக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ................................. நாகராஜ், தல...

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி மற்றும் குடிநீருக்காக 350 கன அடி தண்ணீர் திறப்பு: தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் திறந்து வைத்தார்

தேனி, ஆக.8- தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இன்று (8.8.2026) நீர்வளத்துறை சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தண்ணீரை திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்த...

தேனி புலிகள் காப்பகம் என்ற பெயரில் 98 மலை கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.7- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட  8 ஊராட்சிகளில் உள்ள 98 மலை கிராமங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனை கண்டித்து வன கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அக்கிராம மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் 7.8.2026 அன்று ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.பாலபாரதி, மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது, 98 மலை கிராம மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து நிறு...

போடி, சின்னமனூர் பகுதியில் உள்ள இரவுநேர உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

தேனி, ஆக.5- தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோர உணவகங்கள் மற்றும் இரவுநேர உணவகங்கள் பெருகி வருவதாகவும், இவற்றில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் உணவகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், உத்தரவின்பேரில் போடிநாயக்கனூர், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இரவு நேர உணவகங்களில் 3.8.2026 அன்று உணவு பாதுகாப்பு அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், சாலையோர மற்றும் இரவுநேர உணவகங்கள் என மொத்தம் 33 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் கெட்டுப்போன நிலையிலிருந்த இறைச்சி மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.  மேலும், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் 4 மேம்படுத்துதல் அறிவிப்பாணை வழங்கப்பட்டு அபாரதம் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல உணவு எண்ணெய்யை ஒருமுறை மட்டும் பயன்படுத்திட வேண்டும் எனவும், மீதான எண்ணெய்யை அரசால் அங்கீகரிக்கப்பட்ட RUCO நிறு...

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தொடரும் குழப்ப நிலை குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, ஆக.4- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  ஆசிரியர்கள் பணிபுரியும் பகுதியிலேயே கணக்கெடுப்பு பணி வழங்காமல் பல்வேறு கி.மீ தூரம் ஊராட்சி விட்டு ஊராட்சி, பேரூராட்சி  நகராட்சி பகுதிகளில் பணி வழங்கியது. கணக்கெடுப்பாளர்களுக்கு அதிகப்படியான  வீடுகள் ஒதுக்கீடு செய்திருப்பது. எந்தவிதமான சந்தேகங்களுக்கும் முறையான பதில் வழங்காமல் மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்ற பதில் கூறுவது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முற்பகல் அல்லது பிற்பகல் அனுமதி தரப்பட்டுள்ள நிலையில்  தேனி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கிராமங்களுக்கு சென்று மக்களை தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு. அதுபோல பொது மக்கள் தாமாக முன்வந்து புள்ளி விவரம் அளிக்கும் வாய்ப்பு குறைவு அங்கன்வாடி, சத்துணவு ஊழியர் களை உதவிக்கு அழைத்தால் அவர்கள் வருவதில்லை. அதுபோல சில மாவட்டங்களில் கணக்...