Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சர்வேயர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.12-

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 11.8.2026 அன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பணி பாதுகாப்பு வழங்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் நில அளவை பணிக்கு சென்ற சர்வேயர் மகேஷ் அவர்களை எதிர் தரப்பினர் சர்வே செய்ய கூடாது என்று கூறி தாக்கி உள்ளதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

..............................

நாகராஜ் தலைமை நிருபர் 

Comments