Skip to main content

Posts

Showing posts with the label நலத்திட்டம்

தேனியில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வழங்கினார்.

தேனி, அக்.18- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 18.10.2026 அன்று நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட கலெக்டர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிறப்பு திட்டமாக தேனி மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ ரூபாய் 30-க்கு சன்னரக அரிசி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பேசுகையில், தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டியில் தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அந்த காலக்கட்டங்களில் தேனி மாவட்டம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் எந்தவொரு பெரிய அளவிலான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. ஆனால், தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ச...