Skip to main content

Posts

Showing posts from October, 2026

தேனியில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வழங்கினார்.

தேனி, அக்.18- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 18.10.2026 அன்று நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட கலெக்டர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிறப்பு திட்டமாக தேனி மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ ரூபாய் 30-க்கு சன்னரக அரிசி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பேசுகையில், தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டியில் தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அந்த காலக்கட்டங்களில் தேனி மாவட்டம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் எந்தவொரு பெரிய அளவிலான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. ஆனால், தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ச...

தேனி அல்லிநகரம் நகராட்சியின் குப்பை கிடங்காக மாறும் பைபாஸ் சாலை : வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் துர்நாற்றம் வீசும் அவலம்; குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை

தேனி, அக்.17- தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில், திண்டுக்கல் TO குமுளி பைபாஸ் சாலை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதி குப்பைக் கிடங்காக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால், வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகரின் தூய்மையை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் குப்பைகளை அகற்றுவதற்கும், அவற்றை முறையாக கையாளுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து, அப்பகுதியை தூய்மையாக நகராட்சி...

தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தொடக்க விழா: தலைவர் வி.ஆர்.ராஜன் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தேனி, அக்.16- தேனி மாவட்டத்தில், தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தொடக்க விழா நிகழ்வு தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள வெள்ளான் செட்டியார் திருமண மண்டபத்தில் 16.10.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். GAT ஏரியா லீடர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார் விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  விழாவின் போது தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தலைவராக டாக்டர் வி.ஆர். ராஜன் தலைமையில் செயலாளர் அருள் கண்ணன், பொருளாளர் மனோகரன், முதல் துணைத்தலைவர் ஏ.பி.பி. ராஜா அழகணன், இயக்குனராக பெரியகுளம் நேசம் முருகன் மற்றும் நிர்வாகிகள், இயக்குனர்கள் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு GMT மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் பதவியேற்று வைத்தார்.  விழாவில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் வழக்கறிஞர் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், லயன்ஸ் கிளப் நிர்வ...

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள CEOA மெட்ரிக் பள்ளி நடத்த அனுமதி கோரி: தனியார் பள்ளிகள் DEO அலுவலகத்தில் பெற்றோர்கள் முற்றுகை

தேனி, அக்.15- தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை மதுரையை சேர்ந்த சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி நிர்வாகம் தற்போது நடத்தி வருகிறது. இந்த பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நிர்வாக பிரச்சனை காரணமாக பள்ளிக்கு சரியான உட்கட்டமைப்பு இல்லாத இடத்தில் பள்ளி நடத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் பள்ளி நடத்துவதற்கு உரிய உட்கட்டமைப்பு இல்லாததால் வகுப்புகள் நடத்த அனுமதிக்க முடியாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் தேனி மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போது மாவட்ட கல்வி அலுவலரிடம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளியை நடப்பு 2026-2027 கல்வியாண்டு முழுவதும் சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்...

தேனி மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவேன்: புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட வ.சிவகிருஷ்ணமூர்த்தி தகவல்

தேனி, அக்.10- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10.10.2026 அன்று தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக  வ. சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, தற்பொழுது சென்னையில் வசித்துவரும் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, (B.Tech) பட்டம் பயின்று, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் (UPSC) தேர்ச்சி பெற்று. விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி)-ஆகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி சார் ஆட்சியராகவும், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக வ.சிவகிருஷ்ணமூர்த்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக பணி வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொண்டு, சிறப்புமிக்க தேனி மாவட்ட...

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

தேனி, அக்.2- அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2.10.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார். கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம். தணிக்கை அறிக்கை. தூய்மையான குடிநீர் விநியோகம், பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல்.ஜல் ஜீவன் திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதாயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம். ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கிராம செழுமை மீட...

தேனியில், மகளிர் கட்டணமில்லா "வெற்றிப் பயணம்" திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 4 வெற்றிப் பயண பஸ்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேனி, அக்.2- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 2.10.2026 அன்று சென்னை, கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா "வெற்றிப் பயணம் திட்டத்தை" தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், கர்னல் ஜான் பென்னிகுயிக் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 வெற்றிப் பயண பஸ்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதி சிந்தனையை முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப்பயணம்' திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் திண்டுக்கல் மண்டலத்தின் மூலம் தேனி மாவட்டத்தில், மதுரை - போடி வழித்தடம், மதுரை - கம்பம் வழித்தடம், மதுரை - கும...