தேனி, ஏப்.29- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 அன்று வீரபாண்டி கோவில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உணவு கூடம் அமைக்க ஏலம் எடுத்த இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏலதாரர் தரப்பபை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர்
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,