அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு
தேனி, ஏப்.16-
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்
அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்
எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன்.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்
போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்த்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்
தேனி மாவட்டத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்.
என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டது தேனி மாவட்டம் தான். அதனால் நான் தேனி மாவட்டத்தை என்றைக்கு மறக்க மாட்டேன்
நீண்ட நெடிய அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரர், அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ். மாற்றி, மாற்றி காலை பிடித்து துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று நமது கழகத்திற்கு வந்துள்ளார்
அதிமுகவை அமித்ஷாவிடம் மொத்தமாக விற்றுவிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்
போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழப்பு செய்ய வைக்க வேண்டும்
இலவச மகளிர் பேருந்து திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாய் சேமித்துள்ளனர், 1.30 கோடி மகளிருக்கு உரிமை தொகை கொடுத்துள்ளோம். அதை தடுத்து நிறுத்துவதற்கு அதிமுகவும், பாஜகவும் நீதிமன்றம் சென்று முயற்சி செய்தனர். ஆனால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதை முறியடித்து 3 மாதங்களுக்கு சேர்த்து மகளிர் உரிமை தொகையை கொடுத்து விட்டார்
திமுக மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மகளிர் கையில் ரூ.8 ஆயிரம் கூப்பனை ஒப்படைத்து விடுவோம். அதை வைத்து நீங்களே முடிவு எடுத்து உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
இதற்கிடையே மீண்டும் போட்டோ குறித்து தொண்டர்கள் கேட்ட போது உலக புகழ் பெற்ற போட்டோவை நேயர் விருப்பம் போல நீங்கள் கேட்கிறீர்கள். இதோ பாருங்கள் என்று காண்பித்தார்.
இதனைத்தொடர்ந்து தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்று நாடாளுமன்றத்தில் எம்.பி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றி உள்ளார்கள் அதை முதன் முதலாக எதிர்த்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான்
543 நாடாளுமன்ற தொகுதியாக உள்ள நிலையில் இந்த சட்ட மசோதாவால் 815 ஆக உயர்த்த போகிறார்கள் என தெரிவித்தார்கள். 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு 59 தொகுதிகள் வரவேண்டும் ஆனால் 47 தான் கொடுக்க முடியும் என கூறுகிறார்கள் இதனால் 12 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இந்த தண்டனை கொடுக்கிறது ஒன்றிய அரசு
சட்ட மசோதா நகலை இன்று தமிழக முழுவதும் எரித்து நமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் தமிழ்நாட்டில் இந்த மசோதாவால் எந்த பாதிப்பும் வராது என்று. அவர் பாதிப்பு வரும் என்று கூறினால் அவருக்கு தான் பாதிப்பு ஏற்பட்டு விடும். அதனால் தான் நான் கூறுகிறேன் மோடியின் நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிச்சாமி .
எனக்கு அனுபவம் இருக்கா என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி ஆம் எனக்கு காலில் விழுந்து முதலமைச்சரான அனுபவம் கிடையாது, சங்கீ கூட்டத்திற்கு அடிமையாக இருக்கும் அனுபவம் எனக்கு கிடையாது .
சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற அவரையே யார் என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறும் தேர்தல்,
டெல்லி அணியை நாம் வீழ்த்த வேண்டும். தமிழ்நாடு அணியை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும்.
நான் தலைவரின் மகனாக கேட்கிறேன், கலைஞரின் பேரனாக கேட்கிறேன். போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை உதயசூரியன் சின்னத்தில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது தமிழக முன்னாள் முதல்வர் போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கைகளை தூக்கி கும்பிடும், கையில் உதயசூரியன் சின்னத்தையும் காண்பித்தார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்






Comments