Skip to main content

Posts

Showing posts from June, 2026

தேனி பழனிசெட்டிபட்டியில் த.வெ.க அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக-வினர் கைது

தேனி, ஜூன்.29- தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் சரத்குமார் பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.  இதனை கண்டித்து தேனி திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் த.வெ.க அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 29.6.2026 அன்று நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணகுமார், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், ஒன்றிய செயலாளர் அய்யப்பன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக மாணவரணியினர் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கொண்டே ஊர்வலமாக வந்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்வலமாக வந்த திமுக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து திமுக-வினர் சாலையில் அமர்ந்து த.வெ.க அமை...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் தொடர்பான மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்: பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்

  தேனி, ஜூன்.29- தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் 29.6.2026 மற்றும் 30.6.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முகாமை பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ, துணைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமின் போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் சேவைகளான புதிய சொத்துவரி நிர்ணயம், வரி விதிக்கப்படாத வரிவிதிப்புகளின் கீழ் சொத்து வரி நிர்ணயம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், தொழில்வரி, தொழில் உரிமம், கட்டிட உரிமம், மனைப்பிரிவு அங்கீகாரம், பிறப்பு இறப்பு சான்று, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை போன்ற சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த சிறப்பு குறைதீர்வு முகாமின் மூலம் பெறப்படும் மனுக்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென பேரூராட்சி அதிகாரிகளுக்கு பேர...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ‌.க-வில் இணைந்தனர்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளராக இருந்து வந்த தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க-வில் இணைந்தனர். இதற்கான இணைப்பு  26.6.2026 அன்று தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் அதிமுக பேரூர் நிர்வாகிகள் ரவி ராணி, பாண்டியம்மாள் மாயத்தேவர், சந்திரசேகர், முருகேசன், பவுன்தாய் ஜெயராம், வெற்றிச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, முத்துப்பாண்டி, தாணு விக்னேஷ், நவீன்குமார், பாண்டியராஜன், முருகேசன், ரிஷிபாரதி, அகமது ஆரிப், அருண்பண்டியன், ஜெகநாதன், வெள்ளைத்துரை, போஸ் மணிகண்டன் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவக்குமார், சந்திரா வெற்றிச்செல்வன், ஆசைத்தம்பி, வெங்கடேஷ், முத்தையன், முத்துக்குமரன், அறிவானந்தம், ராஜ பார்த்திபன், முருகேசன், வீரமணி, மணிகண்டன், தேவதாஸ், ரமேஷ், நாகேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர்  த.வெ.க-வில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வின் போது தேனி த.வெ.க வடக்கு மாவட்...

தேனியில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஓட்டம் : மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.6.2026) உலக போதைப்பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப்பொருள் இல்லாத உருவாக்க வேண்டும் நோக்கில், Start Run, Stop Drug Anti Drug Run 2026 விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் சமூகத்தை என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் அவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி மேற்கொண்டு, தொடர்ந்து Start Run, Stop Drug - Anti Drug Run 2026' விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.  இத்தொடர் ஓட்டம் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அறியும் வண்ணம் பதாகைகள் ஏந்தி நிறைவாக விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை பெரியகுளம் சட்டம...

தேனியில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம்: நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு ரூ.4.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்

. தேனி, ஜூன்.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக கூட்டரங்கில் இன்று (25.6.2026). முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையேற்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசுகையில், முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுவதன் நோக்கம் முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளை பெறுவதையே ஆகும். அந்த வகையில் இதுபோன்ற கருத்தரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு சுயதொழில் மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மற்றம் வங்கிக்கடன் விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் பயிற்சிபெற்று வங்கிக் கடனுதவி மூலம் சுயதொழில் உருவாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் தாங்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கிட முடியும். மேலும், மகளிர்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து தொழில் முனைவோராக பயன்பெறுவதற்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வழங்கப்படும்...

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஏற்படுத்தி தர கோரி அமைச்சரிடம், நகராட்சி கவுன்சிலர் கடவுள் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.25- தேனி மாவட்டத்தில் ஆய்வு பணிக்காக வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அவர்களிடம் தேனி காவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், நகராட்சி கவுன்சிலர் கடவுள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி அல்லிநகரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டியில் பகுதியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. தேனி நகராட்சி எல்லைக்குள் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பள்ளியில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இட வசதியும் உள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், தேனி நகராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்கள் இலவசமாக (அரசு பள்ளியில்) உயர்நிலை கல்வி பயில ஏதுவாக எங்கள் ஊரிலுள்ள பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதுபோல எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் அருகில் உள்ள கிராமங்களான பின்னத்தேவன்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்...

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிட பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் ஆய்வு

தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இன்று (24.6.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து  அமைச்சர் அவர்கள், விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகள...

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு

  தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் க.விலக்கில் இன்று (24.6.2026) அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நடைபெற்று வரும் உற்பத்தி பணிகள், பருத்தி கொள்முதல் நடைமுறைகள், நூல் உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்திறன், மின்சார பயன்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேவையான நூல்கள் உற்பத்தி ஆகியன குறித்தும். கடந்த காலங்களில் நலிவுற...

தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளர் போடி ஏ.பி.பி ராஜா அழகணன் த.வெ.க-வில் இணைந்தார்

தேனி, ஜூன்.23- தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளராக இருந்த போடி பகுதியை சேர்ந்த ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதற்கான இணைப்பினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் முன்னிலையில் ஏ.பி.பி. ராஜா அழகணன் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். த.வெ.க-வில் இணைந்துள்ள ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் நிதியமைச்சர், தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர், தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு அரசு நேர்முக உதவியாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின்  உதவி மேலாளராகவும் பணியாற்றி  கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ........................... நாகராஜ், தலைமை நிருபர்   செல் - 9842145271

இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளி சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா

  தேனி, ஜூன்.23- தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் ராணுவ வீரர். இவர் இந்தியாவின் மிக உயரிய தேசிய கெளரவமிக்க விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்றதை பாராட்டும் விதமாக வாழ்த்து பாராட்டு விழா கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிராஜ், பள்ளியின் தாளாளர் அருட்சோதரர் அருள்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றதை ராணுவ வீரரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர். விழாவில் புனித அலோசியஸ் மழலையர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ஜஸ்டின் திரவியம், அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் சேசு, சார்லஸ் மற்றும் புலவர் சேவியர் பீட்டர், ராஜ்குமார், மது, ஜஸ்டின், ஜஸ்டின் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி மற்றும் வடபுதுபட்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா : கேக் வெட்டி, சேலை, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தேனி, ஜூன்.23- தமிழக வெற்றிக் கழகம் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா 22.6.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.  இதில்  தேனி நகரில் தெய்வா பால்பாண்டி ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வா ஹோட்டல் முன்பு அசைவ பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க-வை சேர்ந்த தக்காளி சந்திரன், ஜெயமணி, ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் விஜய் சசிகுமார் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க வடபுதுபட்டி கிளை செயலாளர் ஞானராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல வடபுதுப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான...