இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளி சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் ராணுவ வீரர். இவர் இந்தியாவின் மிக உயரிய தேசிய கெளரவமிக்க விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்றதை பாராட்டும் விதமாக வாழ்த்து பாராட்டு விழா கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிராஜ், பள்ளியின் தாளாளர் அருட்சோதரர் அருள்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றதை ராணுவ வீரரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் புனித அலோசியஸ் மழலையர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ஜஸ்டின் திரவியம், அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் சேசு, சார்லஸ் மற்றும் புலவர் சேவியர் பீட்டர், ராஜ்குமார், மது, ஜஸ்டின், ஜஸ்டின் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments