Skip to main content

Posts

Showing posts with the label பிரசாரம்

போடி நகரில் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்த திமுக வேட்பாளர் ஓபிஎஸ்

தேனி, ஏப்.21- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சமுதாய தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்புக்கான் இறுதி கட்ட பிரசாரம் 21.4.2026 அன்று மாலையுடன் நிறைவு பெற்றது.  இந்த இறுதி கட்ட பிரசாரத்தினை திமுக வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள பார்க் ஸ்டாப், வ.உ.சி சிலை,  தேவர் சிலை, கட்டபொம்மன் சிலை, அணைப்பிள்ளையார் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், முன்னாள் எம்பி ரவிந்திரநாத், போடிநாயக்கனூர் நகர் கழக செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் நகர்மன்ற ...