Skip to main content

Posts

Showing posts with the label மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளர் A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தேனி, ஜூன்.3- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் 32 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி உதவி மேலாளராக பணி நிறைவு பெற்ற A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் உள்ள வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 2.6.2026 அன்று நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.,  பார்த்திபன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், தொழிலதிபர் ராஜசேகரன், வக்கீல் செல்வகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற A.P.P. ராஜா அழகணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். விழாவில் தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இ.காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்வகுமார் உள்பட  கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

  தேனி, ஜூன்.1- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்பப் பெற்று, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 1.6.2036 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சின்னச்சாமி மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களிடம்  விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  ...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

வைகை அணையை தூர்வார வேண்டும்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் வலியுறுத்தல்

தேனி, ஜூன்.1- தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அணையை உடனடியாக தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மாநில பொதுச்செயலாளர்  வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வைகை அணையை, மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த அணையின் நீர் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் அடிப்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் படிவங்களை அகற்றும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது காலத்தின் கட்டாய...

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூன் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தேனி, மே.30- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களின் ஆணைக்கிணங்க 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் தற்போது முதல்வர் அவர்கள் விவசாயிகள் சோறு போடும் வயிற்றில் அடித்து உள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விஞ்ஞான பூர்வமான செயலை விவசாயிகள் மத்தியில் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆகையால் தமிழகம் முழுவதும் மற்றும் தேனி மாவட்டத்தில் 1.6.2026 அன்று திங்கட்கிழமை (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும், அனைத்து அமைப்புகளும் நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு நமது உரிமையே வென்றெடுப்போம். என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார். .............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கம்பம் எம்.எல்.ஏ-விடம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

தேனி, 28- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மற்றும் வினோரா பவுண்டேசன் இயக்குனர் லென். டாக்டர் வி.ஆர். ராஜன் தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு, ஆற்றுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு, விவசாய வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை தங்களது தலைமையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டம் கிராம ஊராட்சிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். -இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. -CSR நிதி மூலம் RO குடிநீர் மையங்கள் அமைக்கலாம். -குடிநீரால் பரவும் நோய்கள் குறைய...

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது

   தேனி, மே.27- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று (27.05.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழ்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்விலும் முன்னேற்றம் காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்,  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், மாதாந்திர உதவித்தொகை. மூன்று சக்கர வாகனம், காதுக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, ரூ.8,14,400/- மதிப்பிலான ...

தேனியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் தேனி மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி, மே.27- அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மையத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 26.5.2026 அன்று தேனி பெரியகுளம் சாலையில் உள்ள கூடலிங்கேஸ்வரா மண்டபத்தில் நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பில்டர்ஸ் அசோசியேசன் மாநில சேர்மன் ராமலிங்கம், முன்னாள் மாநில சேர்மன் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவின் போது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது. இதில் தேனி மைய சேர்மனாக தண்டபாணி, செயலாளராக அமிதாப்பச்சன், பொருளாளராக அந்தோணி, துணைச் சேர்மனாக சின்னராஜா, இணைச் செயலாளராக சிராஜுதீன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பதவி ஏற்றுக்கொண்டனர்.  விழாவில் தொழிலதிபர்கள் முத்து கோவிந்தன் (KMC), சர்வேஸ்ராஜா, வசந்த், மனோகரன், பாண்டியராஜ், கிளாசிக் மணி, அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நவ்சாத், விசாகன், அமிதாப்பச்சன் உள்பட தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மைய புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரி...

தேனி தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு

தேனி,மே.27- நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு 26.5.2026 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு  தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வேதபுரி, ஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவிலில் நடைபெற்றது. இந்த குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடுக்கு ஸ்ரீ சமனாந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ தேவகுரு ஹோமம் செய்து ஸ்ரீ தேவகுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, ஆதிகுருவுக்கும், தேவகுருவுக்கும் ஷோடச உபசார பூஜைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரமம் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தட்சிணமூர்த்தி மற்றும் உற்சவர் குருபகவானை தரிசனம் செய்தனர். குருபூஜை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. ...............................

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் (94877 71077) சேவை தொடக்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, மே.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.05.2026) பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,  பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி ...

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு நிகழ்வில் வலியுறுத்தல்

தேனி, மே.25- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்வு 24.5.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி நகர துணை செயலாளர் இராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சக்திவேல் வழிகாட்டினார்.   நிகழ்ச்சியில் சிறப்பு. அழைப்பாளராக தமிழக ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் மானனீய சுவாமி சுடலையானந்தா கலந்து கொண்டு ஆசி வழங்கினார். இந்த வார வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமை, இந்து சமுதாய முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நிகழ்ச்சியின் போது சமூக நலன், மக்களின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் – 1 தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசா...

தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் : சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன்

தேனி, மே.24- தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் அல்லிநகரம் 5-வது வார்டு மச்சால் தெருவில்  பாதாளச் சாக்கடைக்காக ( LS lifting station ) குழி தோண்டி அடைக்கப்படாமல் உள்ளன.  அதுபோல பாதாளச்சாக்கடை குழிகள் கடந்த (26.5.2025) அன்று தொடங்கி பணியும் ஒரு வருடமாக முடிவடையாமல் குழிகள்  மூடப்படாமல் உள்ளன.  பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் இருப்பதால் கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  மேலும் மூன்று இடங்களில் ட்ரைனேஜ் உடைத்து கழிவுநீர் மந்தைக்குளம் கண்மாயில் திருப்பிவிடப்பட்டு வெகு நாட்களாகிறது. மச்சால் தெரு மற்றும் கிணற்று தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் இன்று வரை மூடப்படாமல் உள்ளது.  இதேபோன்று சாக்கடை கால்வாய்கள் தூர் வாருவது, ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற அடிப்படை பணிகளுக்காக கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தொடர்ந்து போராடி வருகிறார்.  எனவே தேனி அல்லிநகரம் நகராட்சி  நிர்வாகம் பாதாள சாக்கடை உள்ளிட்ட ச...