தேனி அருகே, தீர்த்த தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோவில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தேனி, ஜூலை.5-
தேனி மாவட்டம், போடி சாலையில் உள்ள கோடாங்கிபட்டி அருகே அமைந்துள்ள தீர்த்த தொட்டி முருகன் @ அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் 5.7.2026 அன்று நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2.7.2026 முதல் விக்னேஸ்வரா பூஜை , பாலமகாகணபதி ஹோமம், யாகவேள்வி, திருமுறை பாராயணம் மகா தீபாரதனை போன்ற பூஜைகள் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2.7.2026 அன்று கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், ஹோமம் செய்யப்பட்டு ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் சுபிதா, தொழிலதிபர் சக்தி உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் சிறுவர், சிறுமியர்கள் சுவாமி முருகன் வேடமணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை பக்தர்கள் வியப்புடன் கண்டுகளித்து அந்த சிறுவர், சிறுமிகளுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை துரைராஜபுரம் முருகப்பா புளூ மெட்டல்ஸ் குழுமத்தின் நிர்வாகி முருகப்பா குடும்பத்தினர் செய்திருந்தனர்.
..............................
K.நாகராஜ், தலைமை நிருபர்







Comments