Skip to main content

Posts

Showing posts with the label கூட்டம்

திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டம்: தேனி, இடுக்கி எம்.பி.,-க்கள் மற்றும் போராட்ட குழு தலைவர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம்

தேனி, ஜன.25- திண்டுக்கல் லோயர்கேம்ப் இடையே அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்க்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில் பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம் குமுளி வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு, செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்தி ராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன்,துடிவீரன், பாலையா, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரி முட்டம், மாவட்ட சங்க தலைவர் ச...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி, டிச.5- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (05.012026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 241 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், 2 பயனாளிகளுக்கு ஊன்று கோல்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கவிதா, ...

குரும்பாகவுண்டர் இன மக்களுக்கு வருகின்ற தேர்தல்களில் MLA., MP., சீட் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு: தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

தேனி, டிச.7- தேனி மாவட்ட குரும்பாகவுண்டர் இன மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கிருஷ்ண பக்தர் கனகதாசரின் 525-வது ஜெயந்தி விழா தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 7.12.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டான்பெட் முன்னாள் மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன் தலைமை தாங்கினார். தர்மா பவுண்டேஷன் இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். ஆடு வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் வனக்குழு முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய பழங்குடியினர் நிறுவன தலைவர் வக்கீல் விஜயன் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு குரும்பர் பழங்குடி முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உதகை செங்குட்டுவன், ராசிங்காபுரம் அழகர்ராஜா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், மகளிர் குழுவை சேர்ந்த ராம்ஜி ஸ்ரீ ஆனந்த சாய் அன்னதான சேவை இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டத்தில் குரும்பா கவுண்டர் இன மக்கள் சமுதாயம் சார்பில் வீரபாண்டியி...

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, நவ.16- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி வசந்த மஹாலில் 15.11.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் வட்ட துணைத்தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது புதிய நிர்வாகிகளாக மாவட்ட  தலைவராக பிரபு, மாவட்ட செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக குமரேசன் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் சான்றிதழையும், மாநில பொதுச்செயலாளர் குமார் பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.  இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ப...

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தேனி, நவ.1- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 1.11.2025 அன்று நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் தலைமையில் நடைபெற்றது.  தேனி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகையா, அரண்மனைப்புதூர் ஊராட்சி செயலாளர் ரதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி...