Skip to main content

திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டம்: தேனி, இடுக்கி எம்.பி.,-க்கள் மற்றும் போராட்ட குழு தலைவர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம்


தேனி, ஜன.25-
திண்டுக்கல் லோயர்கேம்ப் இடையே அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்க்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில் பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம் குமுளி வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு, செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்தி ராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன்,துடிவீரன், பாலையா, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரி முட்டம், மாவட்ட சங்க தலைவர் சன்னி பய்யம்பள்ளி, துணைத்தலைவர் சிபுதோமஸ், தேக்கடி டூரிசம் கோஆர்டினேஷன் கமிட்டி தலைவர் முகமது ஷாஜி, குமுளி பஞ்சாயத்து தலைவர் வர்கீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments