தேனி, அக்.27- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலையில் குறவர் சமூக மக்கள் 27.10.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், இந்து (SC) குறவர் சமூக மக்கள் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமம் இளவெயினி நகர் பகுதியில் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வசித்து வருகிறோம். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கக்கூடிய குறவர் சமூக மக்களுக்கு அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட பட்டா வழங்கிய இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக தனி தரைதளம் 175 குடியிப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குறவர் (SC) 88 குடும்ப...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,