தேனி, ஜூலை 28-
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிதீர்த்தத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அதற்கான உணவு படையல்கள், பூத நாராயணன் கோயில் சுற்றிலும், ஆற்றங்கரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஆடைகளை விட்டு சென்றது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் வரக்கூடிய பக்தர்களுக்கு நோய் தொற்று உண்டாகக்கூடிய சூழலை ஏற்படும்.
இதனை தடுக்கும் வகையில் வனத்துறை, அன்பு அறம் செய்ய அறக்கட்டளை, பாரஸ்ட் வெல்பேர் தொண்டு நிறுவனம், என்.எஸ். எஸ். அலோசியஸ் பள்ளி மாணவர்கள் முயற்சியில் ஆன்மீகத்தலமான சுருளிதீர்த்தம் பகுதியை தூய்மை பகுதியாக மாற்றப்பட்டது. இதனால் ஆன்மீக தளத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.
நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வாக கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி, அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி சுருளிப்பட்டி அன்பு ராஜா, வனவர் ஜெயகணேஷ், சதீஷ் வனத்தையும்,ஆன்மீகத் தளத்தையும் சுத்தம் செய்வதன் நன்மைகளையும், பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்துவதன் அவசியத்தை பற்றியும் எடுத்துக்கூறி மாணவர்களுக்கான செயல்முறை பாடமாக இன்றைய செயல் அமைய பெற்றது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments