Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு: தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, செப்.6- தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் தேனி பங்களா மேடு நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம், இந்த தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிறைய திட்டங்களை கொடுத்தோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். இந்தப் பகுதி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், அரசு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்பட்டன.  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அம்மா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்க...

ஹைவேவிஸ் பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: 7 கவுன்சிலர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.29- தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதிலிருந்து தலைவர் பதவி தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் தலைவராக இருந்தவர் இறப்பின் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவி காலியாகி இருந்து வருகிறது.  இந்த பேரூராட்சி தலைவர் பதவியை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்களிடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 15-வது வார்டு கவுன்சிலர் ஹேமா தலைமையில் 7 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தேர்தல் அறிவிப்பு கடிதத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கடந்த 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் 10.30 மணிக்கு ஹைவேவிஸ் பேரூர...

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி: காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.  இந்த கோரிக்கை மனுவுடன் ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், ஜாதி சான்று நகல் இணைத்துள்ளோம். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

தேனி, ஜூலை.4- தேனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 32 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார் முன்னதாக தனியார் விடுதியில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில், முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது,  முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற அதே இடத்தில் தற்போது ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முஸ்லிம் மாநாடு நடத்துகிறார்கள், உள்நோக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட போது அனைவரும் குரல் கொடுத்தனர். ஆனால் அஜித்குமார் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட போது ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு சீர்கெட்டுள்ளது. அதை பாதுகாக்க தவறிய ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். "ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்று மக்களை பாதுகாப்பதாக கூறுகிறார் ஸ்டாலின் ஆனால் திமுகவிடம் இருந்து தான் மக்களை பாதுகாக்க வேண்டும திமுகவால் மண்ணுக்கும், மக்களுக்கு...

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.16- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு 16.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் சன்னாசி, காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் போடி நகர தலைவர் முசாக் மந்திரி, கூடலூர் நகர தலைவர் ஜெயப்பிரகாஷ், கம்பம் நகர தலைவர் போஸ், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, ஆண்டிபட்டி ரவீந்திரன், கடமலை மயிலை தங்கம், உத்தமபாளையம் சத்தியமூர்த்தி, கம்பம் அன்பரசன், சின்னமனூர் ஜீவா, போடி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர் சதாசிவம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர்  சின்னபாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் இனியவன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பழனிச்சாமி உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்...

தேனி நகராட்சி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்

தேனி, ஏப்.12- தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சியினர் கூட்டம் 11.4.2025 அன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமை தாங்கினார்.  நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம் உள்பட வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் படி வருகின்ற ஏப்ரல் 21-ம்  தேதிக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை தாங்களாக முன்வந்து அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் கோர்ட்டு உத்தரவினை பின்பற்ற கட்சிகளின் தலைமையில் இருந்து உத்தரவு வந்தவுடன் குறிப்பிட்ட தேத...

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.6- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் கோபிநாத், தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைப்பதுடன், இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருவ...