Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5-

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். 

தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்ய வேண்டும். 

பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிட வேண்டும். மாவட்டம் தோறும் புதிய கிறிஸ்தவ மகளிர் சங்கம் உருவாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

............................

நாகராஜ், செய்தி ஆசிரியர் 

Comments