தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தேனியில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்
தேனி, பிப்.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.2.20206) திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளகளுக்கு முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி வசந்த மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் கலந்துகொண்டு தாய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார். அதுபோல போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள், சின்னமனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் அவர்கள், ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆமகாராஜன் அவர்கள். பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்கள் மற்றும் இதர நகராட்சிகள் அனைத்து பேரூராட்சிகள...