தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
தேனி, நவ.14- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 14.11.2025 அன்று பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 132 மாணவ மாணவியர்களுக்கு ரூ20 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணணக்குமார் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிகமிக முக்கியமானதாக உள்ளது படிப்பில் தொடர்ச்சியாக முழு கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலைய அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு விகிதத்தை விட மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மு...