தேனி, நவ.6-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் முனைவர்.C.மதளை சுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம். இணைச்செயலாளர் T.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் பொறியியல் துறை சார்ந்த பாகங்களின் வடிவமைப்புகளை கணினி உதவியுடன் 3D மாடல்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு துவக்கப்பட்ட 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு 3D பிரிண்டிங் (முப்பரிமாண அச்சிடல்) மையத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணை செயலாளர்கள், முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் முனைவர்.N.மாதவன், முனைவர் M.சத்யா, இயந்திரவியல் துறைத்தலைவர் முனைவர்.B.ராதாகிருஷ்ணன் மற்றும்
பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
..............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்


Comments