தேனி, மே.27- தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியை சேர்ந்த நடிகர் ரியாஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி தனது பிறந்த நாளை முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இதேபோன்று இந்த ஆணடு 26.5.2025 அன்று நடிகர் ரியாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவில், கண்ணீஸ்வரமுடையார் கோவில் பகுதியில் சுற்றி திரியும் முதியவர் மற்றும் ஆதரவற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார். அதுபோல மே 26 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரியாஸ்க்கு திரைத்துறையினர், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................... பாலகுரு, சிறப்பு நிருபர்
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,