தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்
தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...