தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில்; காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
தேனி, ஜூலை.17- தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எளிமையின் சிகரம் மற்றும் கிங்மேக்கர் "கல்விக் கண் திறந்த கர்மவீரர்" எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எண்ணற்ற பள்ளிகளை தொடங்கி, இலவச கல்வி மற்றும் மதிய உணவு திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அவரது கல்வி புரட்சியால் தமிழகம் கல்வியில் புதிய எழுச்சியை அடைந்தது. அவரது தன்னலமற்ற சேவை, எளிமை, நேர்மை மற்றும் மனிதநேயத்தை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பிறந்த நாள் கல்வி திருவிழாவாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழா குறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமூக பொறுப்பு, உடல்நலம், மனிதநேயம் மற்றும் விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் மினி மாரத்தான், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், மாபெரும் ரத...