வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு
தேனி, மார்ச்.9-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் மலைச்சாமி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் முத்துப்பாண்டி சரவணன் உள்ளிட்ட கட்சியினர் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு வந்திருந்த பாஜக-விரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவில் செயலர் அலுவலர் சுபிதாவிடம் பாஜக-வினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் 8 நாட்கள்12.5.2026 முதல் 19.5.2026 வரை வெகு சிறப்பாக தேனி மாவட்டம், மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் பக்தர்கள் அனைவரும் தன் குழந்தைகளுடன் ராட்டினம் ஏறுவது விளையாட்டு பொருட்கள் போன்று வாங்குவதற்கான சிறந்த இடமாக இருந்து கொண்டிருந்தது. இப்போது இந்து சமய அறநிலையத்துறை இந்த 8 நாட்களுக்கான வாடகை பணம் என்ற பெயரில் இந்து சமய அறநிலைத்துறை தன்னுடைய சொந்த நிலம் போன்று ஆண்டுதோறும் பணத்தை ஏற்றிக்கொண்டே சென்றுள்ளது இப்போது ரூ.3,50,00,000 மேலாக ராட்டினம் கடைகளில் ஏலம் விடக்கோரி இந்து சமய அறநிலைத்துறை ஏலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்திர ராட்டினம் ஏலம் இரண்டு முறை ஏலம் எடுப்பவர்களின் அதிக விலை என்று கூறி ஏலம் எடுக்கவில்லை. இதனால் இந்து மக்கள் ஏழை மக்கள் தன் குழந்தையுடன் வந்து அருள்மிகு கௌமாரியம்மன் சாமி கும்பிட வருவோர்கள் இவர்களின் தலையில் தான் இந்த விலை ஏற்றம் அதிகப்படியான செலவுகளை கொடுக்கின்றது. அதனால் மக்கள் வருகை குறைந்து கொண்டே செல்கின்றது. இதனால் இந்த ஏலத்தை தாங்கள் தடுத்து நிறுத்தி இதற்கான மொத்த செலவுகளை கணக்கில் கொண்டு குறைந்தது ரூ.1,00,00,000 கோடிக்கு மேல் செல்லாமல் ஏலம் விடம் வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இது தவறும் பட்சத்தில் சட்டரீதியான வழக்குகள் தொடரப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பாஜக-வினர் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்







.jpg)
Comments