Skip to main content

Posts

Showing posts with the label திறப்பு விழா

தேனி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகன சிறப்பு மையம் திறப்பு விழா

தேனி, ஜூலை.18- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்த தின கல்வித்திருவிழாவை முன்னிட்டு மின்சார வாகன சிறப்பு மையம் (Center of Excellence in Electric Vehicle) திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தாமராஜன் அவர்கள் தலைமை தாங்கி மின்சார வாகன சிறப்பு மையத்தினை திறந்து வைத்து மாணவர்களிடையே எதிர்கால போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள இத்தகைய சிறப்பு மையங்கள் பெரிதும் உதவுமென்று சிறப்புரையாற்றினார். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம், இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த மையத்தின் மூலம் மின்சார வாகன வடிவமைப்பு. பேட்டரி தொழில்நுட்பம். வாகன பராமரிப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி. தொழில்துறை பயிற்சி உள்ளிட்ட ப...

தேனி பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம்: கலெக்டர் வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

தேனி, ஜூலை.14- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில  கல்லூரி வளாகத்தில் இன்று (14.7.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம். பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மையம், மருந்தக பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக தேர்தல் அலுவலக பணிமனை திறப்பு : வேட்பாளர் ஓ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் போடி தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.  இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலக பணிமனைகள் போடி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மனைகள் திறப்பு விழா 6.4.2026 அன்று நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் போடி லட்சுமணன், ஆர்.டி. கணேசன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள ஆரிய வைசிய சோழிய செட்டியார் சங்கம் நடுமண்டபம், ஜே.கே பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், திருமலாபுரம் 24 மனை தெலுங்கு செட்டியார் காமாட்சி அம்மன் கோவில், திருமலாபுரம் நாடார் உறவினர் ச...

தேனியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 35-வது ஷோரூம் திறப்பு விழா : திரைப்பட நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனி, மார்ச்.16- உலகளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 35-வது தேனி புதிய ஷோரூம் திறப்பு விழா 16.3.2026 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), சுதிர் அகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), நந்த லால் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தேனி கிளை துணை தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம் மற்றும் வெள்ளி, கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள...