தேனி, ஜூலை.18-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்த தின கல்வித்திருவிழாவை முன்னிட்டு மின்சார வாகன சிறப்பு மையம் (Center of Excellence in Electric Vehicle) திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தாமராஜன் அவர்கள் தலைமை தாங்கி மின்சார வாகன சிறப்பு மையத்தினை திறந்து வைத்து மாணவர்களிடையே எதிர்கால போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள இத்தகைய சிறப்பு மையங்கள் பெரிதும் உதவுமென்று சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் C.மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம், இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த மையத்தின் மூலம் மின்சார வாகன வடிவமைப்பு. பேட்டரி தொழில்நுட்பம். வாகன பராமரிப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி. தொழில்துறை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள். இணைச்செயலாளர்கள். முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மின்சார வாகன சிறப்பு மையத்தினை பார்வையிட்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கல்லூரியின் முனைவர் M.சத்யா, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் முனைவர் ஆதிலிங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
..............................
K.நாகராஜ், தலைமை நிருபர்

Comments