அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு
தேனி, ஏப்.16- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும் போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்...