தேனி, ஜூன்.1- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்பப் பெற்று, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 1.6.2036 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சின்னச்சாமி மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,