தேனி, செப்.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங். 20.9.2025 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1035-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம். செட்டிநாடு சேலம், பரமக்குடி திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவ...
Publisher of the Website : Nagaraj Kamudurai