தேனி, செப்.26-
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங். 20.9.2025 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1035-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம். செட்டிநாடு சேலம், பரமக்குடி திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக பருத்தி சட்டைகள் Linen பருத்தி சட்டைகள், லுங்கிகள் வேஷ்டிகள், துண்டுகள் மகளிருக்கான சுடிதார் இரகங்கள் மற்றும் குர்திஸ்கள் வாடிக்கையாளர்களுக்காக விற்பனை செய்யப்பட உள்ளது
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையாக தேனி விற்பனை நிலையத்தில் ரூ.53.34 லட்சமும், பெரியகுளம் விற்பனை நிலையத்தில் ரூ.13.54 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தேனி விற்பனை நிலையத்திற்கு ரூ.70 லட்சமும், பெரியகுளம் விற்பனை நிலையத்திற்கு ரூ.25 லட்சமும் சேர்த்து ரூ.95 லட்சங்கள் தீபாவனி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரங்களை www.cooptex.gov.in என்ற வணிக இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது எனவே, பொதுமக்கள் நெசவாளர்களின் நலன் கருதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
இந்நிகழ்வில் மண்டல மேலாளர் (பொ) கனிச்செல்வி, துணை மண்டல மேலாளர் தீபா, தேனி விற்பனை நிலைய மேலாளர் வரதராஜன், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments