Skip to main content

Posts

Showing posts with the label தேனி செய்தி

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...

தேனியில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு

தேனி, மார்ச்.5- தேனியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு 4.3.2026 அன்று தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.  பயிலரங்கு நிகழ்வை மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் தென் மண்டல பொது இயக்குனர் வி.பழனிச்சாமி ஐ.ஐ.எஸ்., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு வந்த அனைவரையும் மத்திய ஊடக தகவல் மையத்தின் சென்னை இயக்குனர் பி. அருண்குமார், ஐ.ஐ.எஸ் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பயிலரங்கில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர்  பிரவீன் பாண்டி மோகன்தாஸ் தொழிலாளர் வரன்முறை சட்டங்கள் சம்பந்தமான தகவல்களை தெரிவித்து பேசினார். இதனை அடுத்து போடியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நறுமண வாரியத்தின் துணை இயக்குனர் (மார்க் கட்டிங்) செந்தில்குமரன் நறுமண பொருட்கள் சார்ந்த எதிர்கால வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இந்தியாவில் விளையும் நறுமணப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தரவுகளையும், அது சார்ந்த உள்நாடு, வெளிநாடு அளவிலான தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை சொல்லி விளக்கமாக பேசினார். இதனைத்தொடர்ந்து ஊடகம் சார்ந்த தகவல்கள் ம...

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் மறுஏலம் மீண்டும் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய கோரி ஏலதாரர்கள் வலியுறுத்தல்

தேனி, பிப்.27- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  மறுஏலம் 27.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் ம...

தேனியில் தூய்மை பணிகள் தொய்வு: நகராட்சி நிர்வாக அலட்சிய போக்கிற்கு நடவடிக்கை எடுக்க கோரி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

  தேனி, பிப்.25- தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, நான் மாற்றுத்திறனாளி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக சேவை செய்து வருகிறேன் தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன.  இந்த 33 வார்டுகளுக்கும் சுகாதார பணிகள் மேற்கொள்ள 5 டிவிஷன்கள் உள்ளன. 1 டிவிஷனுக்கு 22 முதல் 25 நபர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 நபர்கள் மட்டுமே தூய்மை பணிகள் செய்கின்றனர். இதனால் தூய்மைப்பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது.  அதுபோல ட்ரைனேஜில் குப்பைக்கழிவுகள் தேங்கி கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒருமுறை கூட ட்ரைனேஜ் தூர்வாரவில்லை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ட்ரைனேஜ் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. அதுபோல மந்தைக்குளம் கண்மாயில் 5-வது வார்டில் உ...

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனை விதிப்பதாக கூறி ஏலத்தில் இருந்து ஒப்பந்ததாரர்கள் வெளிநடப்பு

தேனி, பிப்.12- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  ஏலம் 12.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ஜெயதேவி, ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியம...

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தேனியில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்

தேனி, பிப்.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.2.20206) திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளகளுக்கு முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி வசந்த மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் கலந்துகொண்டு தாய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார். அதுபோல போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன் அவர்கள், சின்னமனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் அவர்கள், ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆமகாராஜன் அவர்கள். பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்கள் மற்றும் இதர நகராட்சிகள் அனைத்து பேரூராட்சிகள...

தேனியில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி. 2030-ஐ மையப்பொருளாக கொண்டு மாவட்ட அளவிலான கருத்தரங்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது

தேனி,ஜன.6- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (6.22026) eraன் ஊர் erன் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030.ஐ மையப்பொருளாக கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களைக் கொண்ட தனிநபர்கள் மக்கள் பிரதிநிதிகள் இளம் தலைவர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள். வணிகர்கள், சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டறிந்து இலக்கு-2030 உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் வாழ்க்கையையும். வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற...

தேனியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம்

தேனி, பிப்.4- தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் தேனி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் தேனி நேரு சிலை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு  கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில...

தேனி யூனியன், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

தேனி, ஜன.27- தேனி மாவட்டத்தில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 26.12026 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தை திருமணம் சிறுவயதில் கர்ப்பம் அடைதல். அதனால் குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் போன்றவற்றை த...

தேனி மாவட்டத்தில் நடந்த 77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

தேனி, ஜன.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.1.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும். 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 202...

திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டம்: தேனி, இடுக்கி எம்.பி.,-க்கள் மற்றும் போராட்ட குழு தலைவர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம்

தேனி, ஜன.25- திண்டுக்கல் லோயர்கேம்ப் இடையே அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்க்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில் பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம் குமுளி வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு, செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்தி ராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன்,துடிவீரன், பாலையா, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரி முட்டம், மாவட்ட சங்க தலைவர் ச...

தேனியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி

தேனி, ஜன.25- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. . இந்த போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன். உபதலைவர் ஜீவகன். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் சோமசுந்தரம்,  இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவில் படைப்பில் 68 அணிகளும் ஹார்டுவேர் பிரிவு படைப்புகளில் 55 அணிகளும் சேர்ந்து 123 அணிகளாக 730 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டியில் மாணவ, மாணவிகளின் பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, கணினிபொறி மற்றும் அறிவியல் துறையின் ...