தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை தொகையை பெற்று தரக்கோரி கலெக்டரிடம் மனு
தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வனிதா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் பேச்சியம்மாள் தலைமையில் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பணியாற்று வரும் பரப்புரையாளர்கள் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தற்போது பணியாற்றி வரும் அனிமேட்டர்கள் என அழைக்கப்படும் பரப்புரையாளர்களை நியமித்து பராமரித்து வரும் தொடர்புடைய ஏஜென்சிகள் இடைநீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். அதுபோல ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும்.
அதுபோல மற்றொரு மனுவில், தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பரப்புரையாளர்களான நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை சரியான முறையில் ஊதிய தொகை வழங்கவில்லை.
ஏற்கனவே கடந்த 2017 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரை உள்ள 4 வருட காலத்தில் ஒப்பந்தம் எடுத்த ரிவார்டு சொசைட்டி என்ற நிறுவனம் ஆனது எங்களது பரப்புரையாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த தொகையில் இஎஸ்ஐ., இபிஎப்., சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தும் மாதம் ஊதிய ஒப்பந்த தொகை ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கடந்த 2021 ஏப்ரல் முதல் 2026 மே வரை செயல்பட்டு வரும் சென்னை ஜெனிஸ்ரீ கார்ப்பரேட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் பரப்புரையாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த தொகையில் இஎஸ்ஐ., இபிஎப்., சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி எதையும் பிடித்தம் செய்யாமல் மாத குறைந்த ஊதிய தொகை ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கி வருகிறது. மேலும் எங்களது இஎஸ்ஐ., இபிஎப்., கணக்கில் எந்த ஒரு தகவலோ, பதிலோ அளிப்பதில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் முதல் மே வரை 3 மாதங்களாக ஊதிய தொகை வழங்கவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே மேற்கண்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எங்களது கோரிக்கை நிறைவேற்றி நிலுவையில் உள்ள ஊதிய தொகை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
.................................
K.நாகராஜ், தலைமை நிருபர்



Comments