தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உணவு கிட்டங்கிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு
தேனி, ஜூலை.11- தேனி மாவட்டத்தில் இன்று (18.7.2026) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட கலெக்டர் மரு இரா.வைத்திநாதன் முன்னிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்கள் தேனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களை பார்வையிட்டதுடன் அதன் இருப்பு குறித்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப்பொருட்களை இருப்பு வைக்காமல் அவ்வப்போது நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு பராமரிப்பில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் உணவுப்பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி தரம் உள்ள உணவுப்பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடந்து தேனி நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக்கிட்டங்கியில் ரூ4.71 கோடி மதிப்பீட்டில் தலா 10...