Skip to main content

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஏற்படுத்தி தர கோரி அமைச்சரிடம், நகராட்சி கவுன்சிலர் கடவுள் கோரிக்கை மனு


தேனி, ஜூன்.25-
தேனி மாவட்டத்தில் ஆய்வு பணிக்காக வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அவர்களிடம் தேனி காவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், நகராட்சி கவுன்சிலர் கடவுள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,

தேனி அல்லிநகரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டியில் பகுதியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. தேனி நகராட்சி எல்லைக்குள் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பள்ளியில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இட வசதியும் உள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், தேனி நகராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்கள் இலவசமாக (அரசு பள்ளியில்) உயர்நிலை கல்வி பயில ஏதுவாக எங்கள் ஊரிலுள்ள பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
அதுபோல எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் அருகில் உள்ள கிராமங்களான பின்னத்தேவன்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளிலிருந்து வந்து செல்வதாலும் ஊரின் நடுவில் அமைந்துள்ள மதுரை - குமுளி தேசிய நெடுஞ்சாலை(NH) மற்றும் உயர்மின்னழுத்த ரயில்வே இருப்புப் பாதையை (Railway Track) கடந்து வரும் சூழ்நிலை உள்ளதால் பள்ளி வாகன வசதி (ஸ்கூல் வேன்) அரசு சார்பில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மேலும் பள்ளியின் 1-ஆம் வகுப்பு சேர்க்கையை உயர்த்துவதற்கு அடிப்படையாக நர்சரி வகுப்புகள் (LKG UKG) பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியாளர்களுடன் நடத்துவதற்கும் அனுமதி தர வேண்டும்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள பழைமையான 100 ஆண்டுகளுக்கு மேலான வகுப்பறை கட்டிடங்கள், சமையலறை கட்டிடம், ஒரு கழிப்பறை மற்றும் உடைந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை தண்ணீர் தீர்த்தேக்கதொட்டி ஆகியவற்றை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரும்படி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகள் அனைத்தும் பள்ளியின் எமிஸ் தளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளீடு செய்யப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
......................................
நாகராஜ் தலைமை நிருபர் 

Comments