இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைப்பு: தேனி கோர்ட்டில் வக்கீல்கள் MKM முத்துராமலிங்கம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தேனி, ஜன.7- தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் இ-பைலிங் நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட கோர்ட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமையில் வழக்கறிஞர் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது வக்கீல்கள் செல்வன், பாண்டி மணி உள்பட வக்கீல்கள் பலர் உடனிருந்தனர். ........................ நாகராஜ், தலைமை நிருபர்