தேனியில் தூய்மை பணிகள் தொய்வு: நகராட்சி நிர்வாக அலட்சிய போக்கிற்கு நடவடிக்கை எடுக்க கோரி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு
தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
நான் மாற்றுத்திறனாளி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக சேவை செய்து வருகிறேன் தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன.
இந்த 33 வார்டுகளுக்கும் சுகாதார பணிகள் மேற்கொள்ள 5 டிவிஷன்கள் உள்ளன. 1 டிவிஷனுக்கு 22 முதல் 25 நபர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 நபர்கள் மட்டுமே தூய்மை பணிகள் செய்கின்றனர். இதனால் தூய்மைப்பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது.
அதுபோல ட்ரைனேஜில் குப்பைக்கழிவுகள் தேங்கி கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒருமுறை கூட ட்ரைனேஜ் தூர்வாரவில்லை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ட்ரைனேஜ் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. அதுபோல மந்தைக்குளம் கண்மாயில் 5-வது வார்டில் உள்ள மச்சால் 6 குறுக்கு தெருக்களிலும் உள்ள குப்பைகள் கலக்கின்றன. அதையும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கணமாய்க்கரையில் குப்பைகள் அகற்ற்றப்படுகிறது. மிகவும் அழுத்தமான சூழ்நிலையில் குப்பைகள் அகற்ற JCB இயந்திரம் கேட்டால் JCB வண்டிக்கு டீசல் இல்லை என்று நகராட்சியில் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.
நான் பலமுறை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் மனு கொடுத்துள்ளேன். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளேன். தேனிக்கு வருகை புரிந்த சட்டமன்ற ஆய்வுக்குழுவிடமும் மனு அளித்துள்ளேன்.இதுவரை எந்த மனுவிற்கும் பதில் இல்லை எனவே தாங்கள் தயவு கூர்ந்து மேற்கூறியவற்றின் உண்மை நிலையை அறிந்து பொதுமக்களுக்கு நன்மை செய்திட வழி வகுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும், நகர்மன்ற உறுப்பினரான எனது கோரிக்கை மனுவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்
%20(28).jpeg)


%20(26).jpeg)
Comments