தேனி, ஆக.28- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஆர் வல்கனைசிங் கடை முன்பு வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 28.8.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ப...
Publisher of the Website : Nagaraj Kamudurai