Skip to main content

கிருஷ்ணன்கோவில் கே.புதூரில் உள்ள ஸ்ரீ தாண்டாய் என்ற சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு திருவிழா: ஆகஸ்ட் 8-ந் தேதி நடக்கிறது

 


மதுரை, ஜூலை.18- 
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள K. புதூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தாண்டாய் (என்ற) சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழா நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், தக்ஷனாயின காலம் கிரீஷ்மருதோ ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி (ஆடி மாதம் 23-ம் தேதி) சிறப்பான ஆடி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியும், திருவோண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் நடைபெறுகிறது.

K. புதூரில் நம் குலத்தில் உதயமான பெண் தெய்வம் நம்மைக் காக்கும் தாண்டாய் (எ) சீலக்காரி அம்மன் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழாவில் இருளப்பசுவாமி பங்காளிகள், சீலக்காரி வழியில் வந்த பெண் மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் வருகைதந்து அம்மன் அருள் பெற்று இல்லற வாழ்வு சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த பெருந்திருவிழா ஆடி 23-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 9.8.2025 ஆடி 24-ம் தேதி சனிக்கிழமை காலை உணவுடன் அம்மன் பிரசாதம் பெற்று செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

(குறிப்பு: 8.8.2025 அன்று மாலை 6-30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆரம்பமாகும். இந்த பூஜை அம்மனுக்குரிய ஆடி மாதம் குல தெய்வத்தின் முன்பு பௌர்ணமி வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொள்வது குடும்ப மகிழ்ச்சி, மங்கள ஐஸ்வர்யம், ஆரோக்கியம் கிடைக்கும் )
எனவே இந்த சிறப்பு வழிபாடு பெருந்திருவிழாவில் பங்காளிகள் குடும்பத்தினரை இருளப்ப சுவாமி பங்காளிகள் மற்றும் சிறப்புக்குரிய பெண் மக்கள் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments