Skip to main content

Posts

திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டம்: தேனி, இடுக்கி எம்.பி.,-க்கள் மற்றும் போராட்ட குழு தலைவர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம்

தேனி, ஜன.25- திண்டுக்கல் லோயர்கேம்ப் இடையே அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்க்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில் பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம் குமுளி வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு, செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்தி ராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன்,துடிவீரன், பாலையா, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரி முட்டம், மாவட்ட சங்க தலைவர் ச...

தேனியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி

தேனி, ஜன.25- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. . இந்த போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன். உபதலைவர் ஜீவகன். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் சோமசுந்தரம்,  இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவில் படைப்பில் 68 அணிகளும் ஹார்டுவேர் பிரிவு படைப்புகளில் 55 அணிகளும் சேர்ந்து 123 அணிகளாக 730 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டியில் மாணவ, மாணவிகளின் பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, கணினிபொறி மற்றும் அறிவியல் துறையின் ...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.20- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை, பாரதிய கிஷான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் பாபு, மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் கொடியரசன், முல்லை சாரல் விவசாய சங்க தலைவர் ராஜா,  தென்னை விவசாயிகள் சங்க வேல்முருகன், கட்சி சார்பற்ற விவசாய சங்க சிவனாண்டி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி மற்றும் கூட்டுறவு சங்க அணி செயலாளர் குப்புசாமி உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு  கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வு தொடர்...

தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பென்னிகுவிக் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

தேனி, ஜன.15- தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இன்று (15.12026) கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பாரப்பரிய உடையணிந்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உழவர்களின் உழைப்பிற்கும், உயர்வுக்கும் துணைநிற்கும் வகையில் உழவர்கள் போற்றி வணங்கக்கூடிய காளை மாட்டு வண்டியில் அமர்ந்து ஒட்டி சென்று மக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா: பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேனி, ஜன.13- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (13.1.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்து தொழில்களுக்கும். அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த போட்டிகளில் வெற்...

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வேண்டுகோள்

தேனி, ஜன.13- நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூ...

தேனி மாவட்டத்தில் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெற்றுக்கொண்டு, தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தேனி, ஜன.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டத்தில்  "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து,    தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  மேலும், இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன்னார்வலர்களுக்கு வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.  மேலும...

தேனி மாவட்டத்தில் 4.30 லட்சம் ரேசன் கார்டுதார்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, ஜன.8- தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3000/- ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  அதனைத்தொடர்ந்து, இன்று (8.1.2026) தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாய விலைக்கடையில், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், இந்தியா முழுவதும் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள், தமி...

இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைப்பு: தேனி கோர்ட்டில் வக்கீல்கள் MKM முத்துராமலிங்கம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேனி, ஜன.7- தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை  நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் இ-பைலிங் நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட கோர்ட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமையில் வழக்கறிஞர் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வின் போது வக்கீல்கள் செல்வன், பாண்டி மணி உள்பட வக்கீல்கள் பலர் உடனிருந்தனர். ........................ நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி, டிச.5- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (05.012026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 241 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், 2 பயனாளிகளுக்கு ஊன்று கோல்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கவிதா, ...