தேனி, மார்ச்.5-
தேனியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு 4.3.2026 அன்று தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.
பயிலரங்கு நிகழ்வை மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் தென் மண்டல பொது இயக்குனர் வி.பழனிச்சாமி ஐ.ஐ.எஸ்., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு வந்த அனைவரையும் மத்திய ஊடக தகவல் மையத்தின் சென்னை இயக்குனர் பி. அருண்குமார், ஐ.ஐ.எஸ் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து பயிலரங்கில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் தொழிலாளர் வரன்முறை சட்டங்கள் சம்பந்தமான தகவல்களை தெரிவித்து பேசினார். இதனை அடுத்து போடியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நறுமண வாரியத்தின் துணை இயக்குனர் (மார்க் கட்டிங்) செந்தில்குமரன் நறுமண பொருட்கள் சார்ந்த எதிர்கால வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இந்தியாவில் விளையும் நறுமணப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தரவுகளையும், அது சார்ந்த உள்நாடு, வெளிநாடு அளவிலான தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை சொல்லி விளக்கமாக பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஊடகம் சார்ந்த தகவல்கள் மற்றும் உண்மை அறிதல் சம்பந்தமான செயற்கை நுண்ணறிவுகளை எப்படி ஊடகவியலாளர்கள் கையாள்வது குறித்தான விளக்கமான பட விளக்க செயல்முறைகளை செய்து காட்டி ஊடகத் தொழில் சார்ந்த செயற்கை நுண்ணறிவு நிபுணர் ஹபீப் ரகுமான் விளக்கம் அளித்தார்.
இந்த பயிலரங்கு நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் கலந்து கொண்டனர் . இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .முடிவில் இந்த மையத்தின் கள விளம்பர உதவியாளர் போஸ் வெல் ஆசீர் நன்றி கூறினார்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்






Comments