Skip to main content

Posts

Showing posts with the label ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.17- தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (17.7.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அவர்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். ...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தோழி விடுதியையும் பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள அரசு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல், பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துதல் மற்றும் கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மரு. இரா.வைத்திநாதன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர்  மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ............................

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உணவு கிட்டங்கிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு

  தேனி, ஜூலை.11- தேனி மாவட்டத்தில் இன்று (18.7.2026) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட கலெக்டர் மரு இரா.வைத்திநாதன் முன்னிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்கள் தேனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களை பார்வையிட்டதுடன் அதன் இருப்பு குறித்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப்பொருட்களை இருப்பு வைக்காமல் அவ்வப்போது நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு பராமரிப்பில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் உணவுப்பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி தரம் உள்ள உணவுப்பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடந்து தேனி நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக்கிட்டங்கியில் ரூ4.71 கோடி மதிப்பீட்டில் தலா 10...

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிட பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் ஆய்வு

தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இன்று (24.6.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து  அமைச்சர் அவர்கள், விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகள...

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு

  தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் க.விலக்கில் இன்று (24.6.2026) அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நடைபெற்று வரும் உற்பத்தி பணிகள், பருத்தி கொள்முதல் நடைமுறைகள், நூல் உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்திறன், மின்சார பயன்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேவையான நூல்கள் உற்பத்தி ஆகியன குறித்தும். கடந்த காலங்களில் நலிவுற...

தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, ஜூன்.4- கோடை விடுமுறை முடிந்து இன்று (04.06.2026) பள்ளிகள் திறக்கப்பட்டுள்தை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம் மற்றும் மாணவர்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பன குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உணவு தயாரிக்கும் சமையலறை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி கல்வியில் சிறந்...

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் : மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு

தேனி, மே.14- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் இன்று (14.5.2026) நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலக கட்டிடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்...

தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேனி, மே.9- தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் 9.5.2026 அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா)  உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Doori முதலுதவி பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form), கண்காணிப்பு கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும் வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்...

தேனியில் SIR பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை BLO'S மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார்

தேனி, டிச.13- தேனி மாவட்டம். தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (13.12.2025), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4:112025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலானது 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட இரட்டை பதிவு, இடம் பெயர்த...