தேனியில் SIR பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை BLO'S மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார்
தேனி, டிச.13-
தேனி மாவட்டம். தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (13.12.2025), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4:112025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலானது 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
அதனடிப்படையில் இன்று தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட இரட்டை பதிவு, இடம் பெயர்தல் மற்றும் கண்டறியப்படாத வாக்காளார்களின் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறுஆய்வு மேற்கொள்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எந்த ஒரு தகுதியான வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் / மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
..............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்


Comments